திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதம்

திருச்சி: திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்ட விவகாரத்தில் பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மண்ணச்ச நல்லூர் அடுத்த இனாம் கல்பாளையத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த ராஜசேகர் என்ற 27 வயது நபர் கடத்திச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ராஜசேகர், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் ஆதரவாளர் என்று போலீசாரிடம் கூறியதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மாணவியின் உறவினர்களின் நெருக்கடியால் செய்வதறியாது திகைத்த எம்.எல்.ஏ பரமேஸ்வரியோ, தனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், இன்னும் அரை மணி நேரத்தில் போலீசார் உங்கள் பெண்ணை மீட்டு வீட்டுக்கு கொண்டுவருவார்கள் என்று வாக்குறுதி அளித்தார்.

அவர் கூறியபடியே அடுத்த அரைமனி நேரத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி மட்டும் காவல் நிலையத்துக்கு மீட்டு அழைத்து வரப்பட்டார். கடத்திச்சென்ற ராஜசேகரை காவல்துறையினர் தப்பவிட்டதாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கி சிறுமியே விருப்பப்பட்டு சென்றாலும் அது கடத்தலாகவே பார்க்கப்படும் என்பதால் ராஜசேகர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published.