திருச்சி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களில் ஒருவனை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.
@ திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜூவல்லரியில் (அக்டோபர் 2) மர்ம நபர்கள் சுவரில் துளைபோட்டு தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இவற்றின் மதிப்பு மொத்தம் 13 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திருவாரூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை மடக்கிபிடித்து விசாரித்தனர். அவர் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடையர் என தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.🌐