தென்னிந்திய நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபசாரம் செய்த தயாரிப்பாளர், அவருடைய மனைவி கைது

அமெரிக்காவில் நடிகைகளை வைத்து விபசாரம் செய்த தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் அவருடைய மனைவியை போலீஸ் கைது செய்து உள்ளது.

நியூயார்க்,
அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிரபலம் இல்லாத தென்னிந்திய நடிகைகளை வைத்து விபசாரம் செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெலுங்கு தயாரிப்பாளர் மொடுகுமுடி கிஷான் மற்றும் அவருடைய மனைவி சந்திராவை கைது செய்து உள்ளது. இவர்கள் நடிகைகளை ஆசைவார்த்தை கூறி அமெரிக்காவிற்கு அழைத்து சென்று உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீஸ் இருவர் மீதும் 42 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து உள்ளது. ஏற்கனவே போலீஸ் சோதனையில் ஈடுபட்டபோது பல்வேறு தகவல்கள் சிக்கியதாக கூறப்பட்டது. அவர்களுடைய செல்போனை பறிமுதல் செய்து சோதித்த போது அவர்கள் பெண்களை வைத்து விளம்பரம் செய்தது தெரியவந்தது.

Leave a comment

Your email address will not be published.