தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கூட்டணி அமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் வழங்கியது காங். செயற்குழு

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், அந்த கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சோனியா, மன்மோகன் சிங், காங்கிரஸ் முதலமைச்சர்கள், மாநில தலைவர்கள் உட்பட 239 முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 12 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாகவும், அந்த மாநிலங்களில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் ஒருமித்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலுக்கு பின்பாகவும் கூட்டணி அமைப்பதற்கான அதிகாரம், ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையே, காங்கிரஸ் தலைவரான பிறகு, முதன் முறையாக அடுத்த மாதம், தமிழகத்துக்கு ராகுல் காந்தி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment

Your email address will not be published.