தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது!

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது! இந்த விமானத்தை சேவை வரித்துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பறிமுதல் செய்தனர். அதிலிருந்து 4 முறை ஏலம் கோரப்பட்டது. ஆனால் விமானத்தை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வராத காரணத்தினால் விமானத்தை விற்க முடியாமல் வரித்துறையினர் தவித்தனர்.இந்நிலையில், மீண்டும் விமானத்தை மின்னணு முறையில் ஏலம் கோரினர். அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனத்தினர் ரூ.34.8 கோடிக்கு விஜய் மல்லையாவின் விமானத்தை ஏலத்தில் எடுத்தனர்.
@ 2016-ம் ஆண்டு இந்த சொகுசு விமானத்துக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.152 கோடி நிர்ணயிக்கப்பட்டது # மல்லையாவே நேரில் விற்றிருக்கலாம்! அடிமாடு விலை