நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கௌரவ பதவி!👇🏾🌐

நடிகர் சரவணனை திரைப்பட மானியத் தேர்வுக்குழு உறுப்பினராக நியமித்துள்ளது, தமிழக அரசு.

குறைந்த செலவில் (ஒரு படத்துக்கு 8 பிரதிகளிலிருந்து 25 பிரதிகள் வரை) வெளியிடப்படும் தரமான நேரடித் தமிழ்த் திரைப்படங்களுக்கு, மானியமாக தலா ரூ.7,00,000 வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு தேர்வுக்குழு நியமிக்கப்பட்டு, படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டுவரை வெளியான படங்களில் 149 படங்களைத் தேர்வுசெய்து தலா 7 லட்சம் வீதம் 10 கோடியே 43 லட்ச ரூபாய் கடந்தாண்டு வழங்கப்பட்டது.

அந்த வகையில் 2015, 2016, 2017-ம் ஆண்டுகளில் வெளியான படங்களைத் தேர்வு செய்வதற்காக புதிய `திரைப்பட மானியத் தேர்வுக்குழு’வை நியமித்திருக்கிறது தமிழக அரசு.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரனைத் தலைவராகக் கொண்ட தேர்வுக் குழுவில், உறுப்பினர்களாகத் திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், வசனகர்த்தா லியாகத் அலிகான் மற்றும் நடிகர்கள் சிங்கமுத்து, சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

35 மிமீ/சினிமாஸ்கோப்பில் 3000 மீட்டர் நீளத்துக்குக்குறையாமல் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களே மேற்படி மானியம் பெறப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.🌐