நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஹூஸ்டன்: ஹூஸ்டன் நகரில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்தில் நடந்த ஹவ்டி மோடி, நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மோடி பேசும்போது, இந்நிகழ்ச்சியின் மூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது என்றார்.

மோடி பேசியதாவது: குட் மார்னிங் ஹூஸ்டன்,அமெரிக்கா, நண்பர்களே, டிரம்புக்கு அறிமுகம் தேவையில்லை. உலக அரசியல் தீர்மானிப்பவராக இருக்கிறார் டிரம்ப். ஒவ்வொரு வீட்டில் உள்ளவருக்கும் தெரிந்தவர். அவரை மேடைக்கு அழைப்பதில் பெருமை கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் டிரம்பை சந்திக்கும்போத உற்சாகம் வருகிறது.நட்பை பாராட்டக்கூடியவராக, அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கவராக மாற்றியவர் டிரம்ப்.

வெள்ளை மாளிகைக்கு இந்தியா உண்மையான நட்புடன் இருந்து வருகிறது. அமெரிக்காவின் உண்மையான ந ண்பன் இந்தியா என டிரம்ப் கூறினார். இரு நாடுகளுக்கான நட்புறவு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் டிரம்ப் கலந்து கொண்டு இருப்பது சிறப்புக்குரியது. இந்த சந்திப்புமூலம் புதிய வரலாறு படைக்கப்படுகிறது.2017 ல் என்னை அவரது குடும்பத்திற்கு அறிமுகம் செய்தார் டிரம்ப். இப்போது நான் எனது குடும்பத்தை (இந்தியர்களை) அவருக்கு அறிமுகம் செய்கிறேன் என்றார்.🔴