ஜோஸ்: தெற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், 86 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயம் அடைந்தனர்.நைஜீரியாவின், மத்திய பகுதியில் உள்ள, பிளாட்டோ மாகாணத்தின், பரிகின் லாடி பகுதியில், இரு பிரிவினருக்கு இடையே, நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர்.அப்போது ஏற்பட்ட கலவரத்தில், 86 பேர் பலியாகினர்.
ஏராளமானோர் காயம் அடைந்தனர். 50க்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதமடைந்தன. கலவரம் ஏற்பட்ட பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மக்களை அமைதி காக்கும்படி, அந்நாட்டு அதிபர், முகமது புஹரி வேண்டுகோள் விடுத்துள்ளார். நைஜீரியாவில், நிலப் பிரச்னை தொடர்பாக, பல்வேறு பிரிவினருக்கு இடையே, மோதல்கள் நடப்பது வழக்கம். 2009ல், இது போன்று நடந்த மோதலில், ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.–
மாலியில் வன்முறை : 32 பேர் பலி – தெற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், இரு சமூகத்தினருக்கு இடையே, மோதல் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.சமீபத்தில், மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில், குழந்தைகள் உட்பட, 36 பேர் உயிரிழந்தனர். மேலும், பலரை காணவில்லை. இதுவரை, 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.