நைஜீரியா குண்டுவெடிப்பில் 31 பேர் பரிதாப பலி

நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் நேற்று 2 இடங்களில் தற்கொலைப் படையினர் கொண்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். அதில் 31 பேர் இறந்தனர். இந்த குண்டுவெடிப்பை போகோ ஹராம் தீவிரவாதிகள் நிகழ்த்தியதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரி பாபுகரா கோலா கூறும்போது, “நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள தாம்போவா பகுதியில் தற்கொலைப் படையினர் 2 பேர் பயங்கரமான வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். தங்களது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு அதை கூட்டமான இடத்தில் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் 31 பேர் அதே இடத்திலேயே இறந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்றார். – ஏஎப்பி

Leave a comment

Your email address will not be published.