இலங்கையில் பன்னாட்டு உதவியுடன் கட்டப்பட்டு உள்ள மொரகஹகந்த அணையை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், தமது வாழ்நாளில் மகிழ்ச்சியான நாள் இது தான் என்று குறிப்பிட்டார். 7 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் 95 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் 14 புள்ளி 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. உள்ள இந்த அணையில் 248 லட்சம் கனமீட்டர் அளவுக்கு நீரை தேக்க முடியும். மேலும், இந்த அணையில் அமைக்கப்பட்டு உள்ள நீர்மின் திட்டத்தின் மூலம் 258 மெகாவாட் மின்உற்பத்தி செய்யமுடியும் எனவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
1 comment