பலதரபட்ட செய்திகள்

🌍 **பலதரபட்ட செய்திகள் – மதன்*

*🌏 எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது சபாநாயகரின் கடமை, ஆனால் அவர் அதிலிருந்து தவறிவிட்டார், எனவே நீதிமன்றத்தை நாடியுள்ளோம் – எம்எல்ஏக்கள் வழக்கறிஞர் முகில் ரோத்தகி வாதம்*🛑

*🌏 சபாநாயகர் முன்னிலையில் ஆஜராகி யாரும் ராஜினாமா கொடுக்கவில்லை; எப்படி ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க முடியும் – சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி*🛑

*🌏 ஒருவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்கும் பொழுது அதனை ஆய்வுக்கு உட்படுத்தாமல் சபாநாயகர் முடிவெடுக்க முடியாது – அபிஷேக் சிங்வி*🛑

*🌏 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சோளக்காட்டில் முகாமிட்டிருந்த காட்டுயானைகளை விரட்டிய மக்கள்*🛑

*🌏 ரூ.70,000 கோடி முதலீடு… அம்பானி, அதானிக்கு கீழ் வரும் அமேசான், கூகுள் நிறுவனங்கள்…*🛑

*🌏’சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் திமுக மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்’*🛑

*🌏2021 ஆம் ஆண்டுக்குள்ளாக சென்னை முழுவதும் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணிகள் முடிவடையும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்*🛑

*🌏கல்வித்தகுதி அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு: சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு.*🛑

*🌏சட்டமன்ற சபாநாயகராக இருந்தாலூம் நீதிமன்றங்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது; அரசியல் சாசன முறைப்படி அமைத்த நீதிமன்றத்திற்கு பதில்தரும் கடமை சபாநாயகருக்கு உள்ளது*🛑

*🌏கர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகார வழக்கில் எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதம்*🛑

*🌏பள்ளிக் கட்டணம் நிலுவையில் இருந்தாலும் மாணவருக்கு டி.சி. தரமறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு*🛑

*🌏உண்மைக்கு மாறான, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றீர்கள் – நாடாளுமன்ற தேர்தலில் ஒரே ஒரு தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோற்றது என்ற திமுக உறுப்பினர் சுந்தரின் கருத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்*🛑

*🌏தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப 20 ஏக்கர் (அ) அதற்கு மேலாக நிலம் அளிக்க விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுடன், தொழில் முதலீடுசெய்ய விரும்பும் தொழில் முனைவோர்களை இணைக்கும் பாலமாக ரூ.1 கோடியில் வலைதளம் உருவாக்கப்படும். #TNAssembly #சட்டப்பேரவை_விதிஎண்110*🛑

*🌏திருவாரூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயர்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்*🛑

*🌏காஞ்சிபுரம் ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரை சூட்ட வேண்டும்*
*திமுக எம்எல்ஏ சுந்தர்*🛑

*🌏*20 வயது ரஷீத் கானுக்குக் கேப்டன் பொறுப்பு!*🛑

🌍 *ஒரு நாள், டெஸ்ட், டி-20 என அனைத்து ஃபார்மட்களிலும் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கானும், துணை கேப்டனாக அஸ்கர் ஆஃப்கானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.*🛑