பலத்த பாதுகாப்புக்கிடையே சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் எஸ்.வி.சேகர்

சென்னை: பல்வேறு சர்சைகளுக்கிடையே எஸ்.வி.சேகர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். நடிகர் எஸ்வி.சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் மிகவும் இழிவான கருத்தை பதிவிட்டிருந்தார். எனவே  அவரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிகையாளர்கள் சார்பில் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனுக்கள்  தள்ளுபடியானது.

மேலும் உச்ச நீதிமன்றம் எஸ்.வி.சேகரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெருமாறு உத்தரவிட்டிருந்தது. ஆனால் எஸ்.வி சேகர் ஆஜராகவில்லை. இந்தநிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைதாவதிலிருந்து அவரை காப்பாற்றினர். அதனால் எழும்பூர் நீதிமன்றம் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க நேரில் ஆஜராக எஸ்.வி.சேகருக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டது. அதன்படி அதிகாரிகளின் உதவியுடன், கைதாகாமல் உல்லாசமாக சுற்றி வந்த எஸ்.வி.சேகர் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று நீதிமன்றத்தில் ஆஜராயுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.