பழனி அடிவாரத்தில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் சீல்!

பழனி அடிவாரத்தில் சித்தனாதன் பஞ்சாமிர்த கடைக்கு வருமானவரி புலனாய்வுத்துறை அதிகாரிகள் சீல்!

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்!

💥 தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 2020 ஜனவரியில் தொல்லியல்துறை சார்பில் களஆய்வு நடைபெறுகிறது.

வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் களஆய்வு.

2019-2020ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடியை சுற்றியுள்ள இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ள திட்டம்.

கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்துவருவது குறிப்பிடத்தக்கது; மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு ஒப்புதல் தந்த பின் 2020 ஜனவரியில் தொல்லியல் ஆய்வு நடத்த முடிவு.

💥 சென்னை சென்ட்ரல் –
சிறப்பு ரயில் இயக்கம்:

சென்னை சென்ட்ரல் – கொச்சுவேலி இடையே செப்டம்பர் 9-ல் மாலை 7 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம், கொச்சுவேலி – சென்னை சென்ட்ரல் இடையே செப்டம்பர் 10-ல் மாலை 6 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை சென்ட்ரல் – எர்ணாகுளம் இடையே செப்டம்பர் 11 இரவு 7 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம், எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல் இடையே செப்டம்பர் 12 மாலை 5.15-க்கு சிறப்பு ரயில் இயக்கம்.

சென்னை சென்ட்ரல் – கொச்சுவேலி இடையே செப்டம்பர் 10-ல் மதியம் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம், கொச்சுவேலி – சென்னை சென்ட்ரல் இடையே செப்டம்பர் 11-ல் 12.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம்.

💥 புதுச்சேரியில் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது, விற்பனை விலை லிட்டருக்கு ரூ 6-யும், கொள்முதல் விலை ரூ 4-யும் உயர்வு.

💥 கும்பகோணம் அரசினர் கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு.

மாணவர் போராட்டம் தொடராமல் இருக்க கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை.

💥 திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 11.63 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது.

💥 மதுரை : திருமங்கலம் அருகே வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது.

💥 செங்கல்பட்டு : மானாம்பதி அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு ஏரியில் செயலிழக்க செய்யப்பட்டது.

💥
பழனி பஞ்சாமிர்த கடைகள் – 2வது நாளாக சோதனை:

திண்டுக்கல் : பழனியில் சித்தனாதன், கந்த விலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 2-வது நாளாக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை.

💥 அவதூறு வழக்கு – வைகோ விடுதலை:

அவதூறு வழக்கில் இருந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை.

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்ளைவை எம்பியுமான வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

மதிமுகவை உடைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என கூறியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.🔴