பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

கோலாலம்பூர்: ஆசியா கோப்பை பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் பெண்கள் அணியும், இந்திய பெண்கள் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்தது. எட்கா பிஸ்த் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிகா பாண்டே, அனுஜா பட்டில், பூனம் யாதவ், தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

73 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணியினர், 16.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்தது. ஸ்மிரி மந்தனா 38 ரன்களும், ஹர்மான்ப்ரீத் கவுர் 34 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர் .  இதன் மூலம் பாகிஸ்தான் பெண்கள் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்கா பிஸ்த் சிறந்த ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை பெண்கள் டி 20 இறுதி போட்டிக்கு இந்திய பெண்கள் அணி முன்னேறியது.

Leave a comment

Your email address will not be published.