பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான நாசர் ஜான்ஜுவா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2015 அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நாசர் ஜான்ஜுவா நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அண்மை யில் அமைச்சரவையில் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் காலித் நயீம் லோதி சேர்க்கப்பட்டார்.

நாசர் ஜான்ஜுவா

இதனால் இடைக்கால பிரதமர் நசிருல் முல்குக்கும், நாசர் ஜான்ஜுவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதையடுத்து அவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பிரதமர் மற்றும் அமைச்சரவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாசர் ஜான்ஜுவா தனது பதவிக் காலத்தின் போது ஆப்கானிஸ்தான் நாட்டுடன் நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். மேலும் இரு நாடுகளிடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளையும் அவர் தொடங்கி இருந்தார். இதற்கு முன்பு குவெட்டா வில் உள்ள தெற்கு ராணுவ கமாண்ட் பிரிவு தலைவராகவும், இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகத் தலைவராகவும் நாசர் ஜான்ஜுவா பணியாற்றியிருந்தார்.

 

Leave a comment

Your email address will not be published.