Home சினிமா பாகுபலி போன்று சஹோவும் வெற்றி பெறும்: பிரபாஸ் நம்பிக்கை

பாகுபலி போன்று சஹோவும் வெற்றி பெறும்: பிரபாஸ் நம்பிக்கை

436

பாகுபலி போன்று சஹோவும் வெற்றி பெறும்: பிரபாஸ் நம்பிக்கை

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், ஷரத்தா கபூர் நடித்த ‛சாஹோ’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.

விழாவில் பிரபாஸ் பேசியதாவது: பாகுபலி படத்திலிருந்தே எனது நெருங்கிய நண்பராக இருந்த மதன் கார்க்கியும், ஷங்கர்-எஹ்சன்-லாயும் எனக்கு சிறப்பான பாடல்களை தந்துள்ளனர். இப்படம் பாகுபலி போன்று அனைவரையும் கவரும்படி இருக்கும். பாகுபலி பெற்ற வெற்றியையும் பெறும். சில பாடல்களை முழுமையாக வெளியிட முடியவில்லை. காரணம் பாடலில் படத்தின் கதை இருக்கிறது. எல்லா பாடல்களையும் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமாக்கி உள்ளோம். என்றார். 🌐