பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 25-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதில் பஞ்சாப் மாகாணம் முசாபர்கர் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் முகமது உசேன் ஷேக் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் தனக்கு 403 பில்லியன் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். முசாபர்கர் நகரில் உள்ள 40 சதவீத நிலங்கள் மற்றும் அருகில் உள்ள லங் மலானா, டலிரி போன்ற பகுதிகளின் நிலங்கள் தொடர்பாக பாகிஸ் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. 88 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் முகமது உசேன் ஷேக்கிற்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலங்களின் மதிப்பு 403.11 பில்லியன். இதை தனது வேட்புமனுவில் ஷேக் குறிப்பிட்டுள்ளார். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தெரிவித்த சொத்து மதிப்பின்படி ஷேக்தான் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
பாக். தேர்தலில் சுயேச்சை சொத்து 403 பில்லியன்
