பாஜக தலைவராகப் போவது யார்..?

பாஜக தமிழக தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழக பாஜக தலைவர் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. வழக்கமாக பதவி காலியாகும் அதே நாளில் அதற்குரிய நபர்களை தேர்வு செய்து அறிவிப்பது பாஜக வழக்கம். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தமிழக பாஜக தலைவர் பதவியை நிரப்ப பாஜக மேலிடம் மிகவும் கவனமாக இருந்து வருகிறது.தஞ்சை பட்டுக்கோட்டையை சேர்ந்த தேவர் சமுதாயத்தை சேர்ந்த கருப்பு முருகானந்தத்திற்கு தமிழக பாஜக தலைவராகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். தீவிர இந்துத்துவவாதியான இவர் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பாஜகவை பலம் வாய்ந்த இயக்கமாக மாற்றிக் காட்டியவர். ஆனால் ஏராளமான வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன. மேலும் சில சர்ச்சைகளிலும் இவர் பெயர் அடிபடுகிறது.
@ கருப்பு முருகானந்தம் Vs நயினார் நாகேந்திரன்… பாஜக தலைவராகப் போவது யார்..? கேடி ராகவன் – வானதியும் பிடிவாதம்..!🌐