பாரம்பரிய நீராவி ரயில் சென்னையில் இயக்கம்: மக்கள் உற்சாக பயணம்…

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு 163 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீராவி சிறப்பு ரயில் இன்ஜின் நேற்று இயக்கப்பட்டது. இதில், 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த, “இஐஆர் 21′ என்ற நீராவி ரயில் இன்ஜின் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை இயக்குவது வழக்கமாகும். கடந்த 1855-ம் ஆண்டு தயாரான இந்த ரயில் இன்ஜின், 132 குதிரைத் திறன் கொண்டது. இந்த ரயில் இன்ஜின் ஆண்டுதோறும் பராமரித்து, புதுப்பொலிவூட்டப்பட்டது. மக்களின் பார்வைக்காக ஆண்டுதோறும் இயக்கப்படுகிறது. ஆனால், பொதுமக்கள் இதில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை.

இதற்கிடையே, பொதுமக்கள் பயணம் செய்யும் வகையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 3 ஞாயிறுகளில் இந்த பாரம்பரிய ரயில் எழும்பூரில் இருந்து கோடம்பாக்கத்துக்கு இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 3-வது ஞாயிறான நேற்று சென்னை எழும்பூரில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு கோடம்பாக்கத்துக்கு இயக்கப்பட்டது. இதில், 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் ரூ.500, பெரியவர்கள் ரூ.650 என கட்டணம் வசூலிக் கப்பட்டது.

Leave a comment

Your email address will not be published.