பிக்பாஸ் இரண்டாவது சீசனில் இம்முறை பங்கேற்றுள்ள சில ஆண் போட்டியாளர்களின் செயல்பாடுகளால் பார்வையாளர்கள், முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் 2-ல் போட்டியாளர்களாக ஷாரிக், டேனியல், பாலாஜி, மமதி, ரித்விகா, நித்யா, அனந்த் வைத்திய நாதன், ஜனனி, யாஷிகா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, ரம்யா, மஹத், பொன்னம்பலம், மும்தாஜ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 2வின் இராண்டாவது வாரத்தின் இரண்டாவது நாளாக நேற்று (செவாய்க்கிழமை) பிக்பாஸில் ஆண் போட்டியாளர்கள் சிலர் நடந்து கொண்டவிதம் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அதுவும் குறிப்பாக மஹத், ஷாரிக், பொன்னபலம், பாலாஜி இவர்களது செயல்பாடு பார்வைக்கிடையே பெரும் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒளிப்பரப்பிய எபிசோடில், பிக்பாஸ் வைத்த போட்டியில் பெண்கள் சார்பாக பங்கேற்றவர்கள் தோற்றதால், ஆண்கள் அணி எஜமானவர்களாவும், பெண்கள் அணி பணியாளர்களாகவும் செயல்பட வேண்டும் என்று பிக்பாஸ் சார்பில் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆண்கள் அணி எஜமானர்களாக நடந்துக் கொண்டார்கள்.
செண்ட்ராயன் ஒருபக்கம் நகைச்சுவையாக ரித்விக்காவிடம் வேலை வாங்க, மற்ற ஆண் போட்டியாளர்களான மஹத், ஷாரிக் பெண் போட்டியாளர்களிடம் நடந்துக் கொண்ட விதத்தை பலரும் விமர்சித்தனர்.
மேலும் யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் மஹத் நடந்துக் கொண்ட விதமும், அவர்களிடம் நேரடியாகவும், இரட்டை அர்த்த முறையில் பேசியதும் தொலைக் காட்சியில் காண்பதற்கு நெருடலாக இருந்தது என்று பலர் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.
இதோ அவற்றின் சில பதிவு
Praveen
ஆரவ்,கணேஷ்,ஹரீஸ்னு நல்ல பசங்கள பார்த்த வீடு டா அது… டபுள் மீனிங்,சில சமயம் பச்சையாவே பேசிட்டு திரியுதுக.. சைக்
இதுகள பார்க்கும்போது சக்தி,காயத்ரிலாம் எவ்வளவோ மேல்
Achilles
மஹத் சிம்புவோட பிரென்ட்ன்னு நல்லா தெரியுது, ஒரு பிரச்னை நடந்தா எப்படி அதை முடிக்கிறதுன்னு பாக்காம,அந்த பிரெச்சனையா நல்லா ஊதி வளர்த்து, சண்டை மூட்டி விட்டு அதுல நாம எப்படி குளிர் காயலாம்னு நல்ல தெரிஞ்சி வச்சி இருக்கான்,இவன் உள்ள இருக்கிற வரைக்கும் #BiggBossTamil2 க்கு கொண்டாட்டம்
Ada Pongaya
மஹத், பொன்னபலம் உங்கள் மீது வைத்திருத்த மரியாதையை கெடுத்துக் கொண்டீர்கள், போன சீசனில் வந்தவர்கள் சிறந்தவர்கள்
சர்கார்
இதன்பிறகு யாராவது ஷரிக்தான் ஆரவ், மஹத்தான் ஆரவன்னு வந்தீங்க…