புதிய ஐபோன்களில் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் டிஸ்ப்ளே

ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்களிலும் ஒரேமாதிரியான டிஸ்ப்ளேக்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியோல்:
ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரியாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஐபோன் மாடல்களில் லிக்விட் க்ரிஸ்டல் டிஸ்ப்ளே (எல்.சி.டி.) ஸ்கிரீன்களை விநியோகம் செய்தில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக ஜப்பான் டிஸ்ப்ளே இருந்தது. எனினும் எல்ஜி நிறுவனம் தயாரித்த OLED ஸ்கிரீன்களால் ஜப்பான் டிஸ்ப்ளே பின்னடைவை சந்தித்தது.
இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்க இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED (ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு பேனல்கள்) பயன்படுத்தப்பட இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தென்கொரிய ஆப்பிள் நிர்வாகம் சார்பில் எவ்வித தகவலும் வழங்ப்படவில்லை.
கோப்பு படம்
இதேபோன்று ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் எவ்வித தகவலும் வழங்கவில்லை. தற்சமயம் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஜப்பான் டிஸ்ப்ளே நிறுவனமும் ஐபோன்களுக்கான OLED பேனல்களை 2019-ம் ஆண்டு முதல் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்நிறுவனம் புதிய தயாரிப்பு ஆலையை துவங்க முதலீட்டாளர்களை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் ஐபோன்களில் OLED பயன்படுத்தும் பட்சத்தில் எல்ஜி நிறுவனம் அதிகளவு பேனல்களை ஆப்பிள் நிறுவனத்துக்கு தயாரித்து வழங்கும் என தெரிகிறது.

Leave a comment

Your email address will not be published.