புதுச்சேரியில் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது,

🌍 *Aug 31,Sat 2019 Annapparavai news by Madan* 🔴

🌍💥 *புதுச்சேரியில் பால் விலை உயர்வு அமலுக்கு வந்தது, விற்பனை விலை லிட்டருக்கு ரூ 6-யும், கொள்முதல் விலை ரூ 4-யும் உயர்வு.*

💥 *திருச்சி விமான நிலையத்தில்* *மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 11.63 லட்சம் மதிப்புள்ள 300* *கிராம் தங்கம் பறிமுதல் -* *ஒருவர் கைது.*

💥 *மதுரை : திருமங்கலம் அருகே வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 கிலோ போதைப்பொருள் பறிமுதல் – ஒருவர் கைது.*

💥 *செங்கல்பட்டு : மானாம்பதி அருகே கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு ஏரியில் செயலிழக்க செய்யப்பட்டது.*

💥 *பழனி பஞ்சாமிர்த கடைகள் – 2வது நாளாக சோதனை:*

*திண்டுக்கல் : பழனியில் சித்தனாதன், கந்த விலாஸ் பஞ்சாமிர்த கடைகளில் 2-வது நாளாக 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை.*

💥 *அவதூறு வழக்கு – வைகோ விடுதலை:*

*அவதூறு வழக்கில் இருந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை.*

*திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்ளைவை எம்பியுமான வைகோவை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.*

*மதிமுகவை உடைக்க மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முயற்சித்தார் என கூறியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.*

💥 *மருத்துவ காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழுவதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.*

*இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் மருத்துவ தொழில்நுட்பங்களை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது – முதலமைச்சர் பழனிசாமி.*

💥 *மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 75 புதிய மருத்துவ கல்லூரிகளில், 10 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்.*

*மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்.*

💥 *திமுகவில் பதவி பெற்றார் தங்க.தமிழ்செல்வன்!*

*ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோருடன் இணைந்து கொள்கை பரப்பு செயலாளராக தங்கதமிழ்செல்வன் செயல்படுவார் என திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.*

💥 *யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன்.*

*- சீமான்.*

*ரஜினிக்கு அடுத்து முதலிடத்தில் விஜய் தான் இருப்பார், அடுத்த சூப்பர் ஸ்டார் என விஜயின் தாய் சொன்னது சரியே – சீமான்.*

💥 *ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6500 கி.மீ. சாலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு.*

*ரூ.4,521 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.*

*மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள், பாலங்கள் மேம்படுத்தவும், புதிதாக ஏற்படுத்தவும் உத்தரவு.*

💥 *இராமநாதபுரம் மதிமுக இளைஞர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியம் கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ..*

💥 *செல்போன் திருட்டு – இருவர் கைது:*

*சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் தூங்கும் பயணிகளிடம் செல்போன் திருடிய அசோக்குமார், செல்வராஜ் கைது.*

💥 *6 மாத காலத்திற்குள் மக்கள் நீதி மய்யத்திற்கென புதிய சேனல் துவங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது – மநீம துணை தலைவர் மகேந்திரன் பேச்சு.*

*வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக நவம்பர் 7-ம் தேதி முதல் கமல்ஹாசன் முதற்கட்ட பிரச்சாரம் – மகேந்திரன்.*

💥 *அதிமுக ஆட்சியில் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது – அமைச்சர் ஜெயக்குமார்.*

*2021-ம் ஆண்டிற்கு பிறகும் அதிமுக ஆட்சி தொடரும் – அமைச்சர் ஜெயக்குமார்.*

💥 *மு.க.ஸ்டாலினிடம் எந்த பதவியும் கேட்டு நான் திமுகவில்* *இணையவில்லை;* *கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி*
*வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி.*

*- மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி.*

💥 *வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவு – வருமான வரித்துறை:*

*வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு என்று பரவும் தகவல் உண்மையில்லை – வருமான வரித்துறை.*

💥 *திமுகவின் செய்தி தொடர்பு செயலாளராக டி.கே.எஸ்.இளங்கோவனை மீண்டும் நியமித்து திமுக அறிவிப்பு.*

💥 *பாஜக அரசில் அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது, வரிச்சுமை இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி.*

*வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வரே தெளிவான விளக்கம் அளித்துள்ளார் – பன்னீர்செல்வம்.*

💥 *ப.சிதம்பரத்திற்கு மேலும் மூன்று நாட்கள் சி.பி.ஐ. காவல்:*

*ப.சிதம்பரத்திற்கு செப்டம்பர் 2 வரை சி.பி.ஐ. காவல்.*

*ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மூன்றாவது முறையாக ப.சிதம்பரத்திற்கு சி.பி.ஐ. காவல்.*

💥 *ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.*

*ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தீபா, தீபக் ஆஜராகி விளக்கம்:*

*ஜெயலலிதா சொத்துக்களின் ஒரு பகுதியை பொது பயன்பாட்டுக்கு ஏன் வழங்கக்கூடாது? – நீதிபதி கேள்வி.*

*ஏழைகளின் நலனுக்காக ஜெயலலிதாவின் சொத்துக்களை பயன்படுத்துவதில் ஆட்சேபனை இல்லை – தீபா.*

💥 *இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்.*

💥 *வாராக் கடன் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது, ரூ75 ஆயிரம் கோடி அளவுக்கு வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளது – நிர்மலா சீதாராமன்*

*நீரவ் மோடி போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் இருக்க நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்*

*வங்கிகளை பலப்படுத்த நடவடிக்கை, நிபுணத்துவம் வாய்ந்தவர்களை வங்கிகளின் உயர் பதவிக்கு நியமிக்க நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்*

*கடன் வசூலில் சாதனை படைத்துள்ளோம் – நிர்மலா சீதாராமன்*

💥 *வங்கி நிர்வாகத்தில் அரசின் தலையீடு துளி கூட இல்லை – நிர்மலா சீதாராமன்*

*ரூ30 ஆயிரம் கோடி கடன் வழங்க அரசு தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன்*

*பஞ்சாப் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கிகளை இணைக்க முடிவு – நிர்மலா சீதாராமன்*

*1.25 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது, 18 பொதுத்துறை வங்கிகளில் 14 லாபத்தில் இயங்குகிறது – நிர்மலா சீதாராமன்*

*சில்லறை வணிகத்துக்கான கடன் வழங்குவது 21% அதிகரித்துள்ளது – நிர்மலா சீதாராமன்*

*தென்னிந்தியாவில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கிகளை இணைக்க முடிவு ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்.*

💥 *தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான 14ம் கட்ட விசாரணை நிறைவு, 4 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில் 13 பேர் ஆஜராகி விளக்கம்.*

*15ம் கட்ட விசாரணை அடுத்தமாதம் தொடங்கும் என ஒருநபர் விசாரணை ஆணையம் தகவல்.*

💥 *நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 4வது நிலைக்கு முன்னேறியது சந்திரயான் 2 – இஸ்ரோ அறிவிப்பு:*

*நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.*

*இந்நிலையில், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நான்காவது முறையாக சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒருமுறை சுற்றுவட்டப் பாதை மாற்றியமைக்கப்பட்ட பிறகு நிலவி சந்திரயான் தரையிறங்கும். செப்டம்பர் 7ஆம் தேதி, சந்திரயான் 2 நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் நிலவில் லேண்டர் மற்றும் ரோவர் இறங்கி நிலவிலுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.*

💥 *பொதுத்துறை வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாளை நாடு தழுவிய போராட்டம்.*

*- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் பேட்டி.*

💥 *புதுச்சேரி பத்திரப்பதிவுதுறை சார்-பதிவாளர் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.*

*நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.*🔴