புதுடெல்லி : பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரம் நலிந்துள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசு செயற்கையாக உயர்த்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் அன்றாட தேவைக்கு எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க கூடாது என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு செயற்கையாக உயர்த்துகிறது : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
