பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது🌐

🌍ஒரு பொருள் தெளிவாக தெரிவதற்கு போதிய வெளிச்சம் தேவை, வெளிச்சத்தின் உதவியுடன் தெரிந்து கொள்ளுதல். அதை அறிந்து கொள்ள போதிய அறிவு தேவை, அறிவை வெளிச்சம் அல்லது ஒளியுடன் உருவகப்படுத்தி அறிவொளி என்பார்கள். அறிவின்மையை இருட்டு என்பார்கள் அதாவது தெளிவற்றது. மனசுக்குள் மின்னல் அடிச்சது என்றால் சட்டென்று அதைப்பற்றி சிந்தனை கிடைத்தது என்ற பொருள்தானே. அறியும் திறனை ஒளியுடன் தொடர்பு படுத்தி, நம் அறிவுக்கு எட்டாத பிரபஞ்ச இயங்குவிசையின் / இயற்கையின் விதியின் காரணத்தை பேரறிவு என்ற உருவகம் செய்து அந்த பேரறிவே இறைவன் என்ற பொருளில் சொல்லப்படுகிறது🌐