பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

பேராசிரியை நிர்மலாதேவி அருப்புக்கோட்டையில் பள்ளிவாசலுக்குள் திடீரென நுழைந்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவரை போலீசார் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.இரவு 8 மணி அளவில் பெரிய பள்ளிவாசலுக்குள் தலைவிரி கோலத்துடன் திடீரென நுழைந்தார். தம்மை நபிகள் நாயகம் இங்கு அமர சொன்னதாக வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருந்தார். இதனைக்கண்டதும் ஜமாத் நிர்வாகிகள் அங்கு திரண்டனர். நிர்மலாதேவியை அங்கிருந்து வெளியே போகச்சொன்னார்கள். ஆனால் யார் கூறியதையும் அவர் பொருட்படுத்தவில்லை. தரையில் படுத்து உருளத்தொடங்கினார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் அங்கு வந்த மகளிர் போலீசார் நிர்மலாதேவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் வெளியே போக மறுத்து அவர் முரண்டுபிடித்தார். சுமார் 2 மணி நேரம் அனைவரையும் படாதபாடு படுத்திய நிலையில் போலீசார் அவரை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
@ ஒரு பேராசிரியையின் மனம் பிறழ்ந்த நடவடிக்கை!🌐