ப்ப்ப்ப்ப்ப்ப்பாபா. . . என்னா❓ முன்னேற்றம்.

லிட்டர் 70 ரூவா பெட்ரோல ஊத்தி வண்டில நாலு கொடம் தண்ணிய கொண்டு வர்றது எத்தன முட்டாள்தனம்ன்னு பாத்தா இப்ப கடன்வாங்கி கரண்டு குடுக்குற நெலைல இருக்குற அரசாங்கமும் அதே போல ரயில்ல தண்ணிய கொண்டு வருது.

ஆக எம்புட்டு செலவானாலும் கொண்டுவர தண்ணி தான் நம்ம அடிப்பட தேவ அதை எப்படி சேமிக்கிறது வீணான பயன்பாட்ட கொறைக்கிறது இயற்கையிடமிருந்து தருவிக்கிறது என சிந்திக்காத அரசுக்கும் பாமரனுக்கும் என்ன வேறுபாடு.

இதுல நொடில பறக்குற வாகமென்ன
கண்ணிமைக்கிற நேரத்துல ஒலகத்த கைக்கு கொண்டுவர கருவிகளென்ன
கெரகம் விட்டு கெரகம் தாவ ராக்கெட் என்ன
எட்டுவழி சாலை என்ன
நியூட்ரினோ என்ன
மீத்தேன் என்ன
கூடங்குளம் அணுகுண்டு என்ன
ப்ப்ப்ப்ப்ப்ப்பாபா. . .
என்னா❓ முன்னேற்றம்.🌐