சென்னை: மத்திய அரசின் இணைச்செயலாளர்கள் பதவிகளில் ஐ.ஏ.எஸ். தேர்வின்றி வெளியாரை திணிக்க முயற்சி என்றும் தனியார் நிறுவனங்கள், மாநில அரசுப் பணியில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 3 முதல் 5 வருடம் வரை அவர்களுக்க பணி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணி நியமனத்துக்கு இதுவரை இருந்த நடைமுறையை பாஜக அரசு நீக்கி உள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையை சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றார்.
மத்திய பா.ஜ.க. அரசுக்கு வைகோ கடும் கண்டனம்
