மாருதி சுசுகி 2018 சியாஸ் வெளியீட்டு விவரம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் கார் இந்திய வெளியீடு அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி சார்ந்த விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
அந்த வகையில் சிக்வீல்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் 2018 சியாஸ் கார் ஆகஸ்டு 6-ம் தேதி வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சில காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றங்கள் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
2018 மாருதி சியாஸ் மாடல் பார்க்க தற்சமயம் விற்பனை செய்யப்படும் மாடலை போன்று காட்சியளிக்கும் என்றும் வெளிப்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் முன்பக்கம் புதிய பம்ப்பர், மேம்படுத்தப்பட்ட கிரில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த செடான் மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்ட ஹெட்லேம்ப்கள், பகலிலும் எரியும் எல்இடி மின்விளக்குகள் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்கவாட்டில் அதிகம் மாற்றப்படாமல் புதிதாக அலாய் வீல்கள் மட்டும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
இதன் பின்புறம் புதிய டெயில் லைட் கிளஸ்டர், அழகிய எல்இடி உள்ளிட்டவை கொண்டிருக்கும் என்றும் தற்போதைய மாடலை விட அழகிய ஸ்போர்ட் தோற்றம் பெறும் என கூறப்படுகிறது. 2018 சியாஸ் மாடலின் உள்புறம் அதிகப்படியான மாற்றங்கள் இன்றி தற்போதைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. அதன்படி மரத்தாலான டேஷ்போர்டு, 7 இனஅச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், லெதர் சீட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் வழங்கப்படுகிறது.
சியாஸ் மாடல் 1.5 லிட்டர் K-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் காம்பினேஷன்களில் வெளியிடப்படலாம் என்றும் டீசல் மோட்டார் புதிய 1.5 லிட்டர் யூனிட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதன் 1.5 லிட்டர் யூனிட் 103 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது. டீசல் இன்ஜினும் புதிதாய் உருவாக்கப்பட்ட 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த அம்சம் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட சியாஸ் மாடலில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.