மாற்றுமுறை மருத்துவத்தில் அரசு விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஆயுஷ் (ஆயுர் வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அமைச் சகம் அறிவுறுத்தி உள்ளது.
பிரதமர் மோடி ‘ஆயுஷ்’ எனப் படும் மாற்றுமுறை மருத்துவத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தியப் பாரம்பரியத் தின் மாற்றுமுறை மருத்துவத்திற்கு உலகம் முழுவதிலும் முக்கியத் துவம் கூடியுள்ளது. இந்த சூழல் நிலைக்க வேண்டி மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் சார்பில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் மாற்று முறை மருத்துவர்களுக்கான பயிலரங்கம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ‘ஆயுஷ்’ அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாற்றுமுறை மருத்துவங்களுக்கு உரிமம் அளிக்க மாநிலங்கள் அமர்த்தும் அதிகாரிகள் அந்த தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்க வேண் டும். மருந்து விநியோகப் பிரிவு களை அவ்வப்போது சோதனை செய்து போலிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மருந்துகளை தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு உரி மங்கள் அளிக்கும்போது விதி முறைகள் கடைபிடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லை யெனில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர்.
நாட்டின் அனைத்து முறை மருந்துகளையும் முறைப்படுத்த மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மறுசீரமைக் கப்பட்டு 1988-ல் அமலுக்கு வந்தது. இதன்படி மத்திய அரசிடம் அனு மதி பெறாத மாற்றுமுறை மருத்து வத்தின் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மாநிலங்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் ‘ஆயுஷ்’ தனது கடிதத்தில் எச்சரித் துள்ளது. தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை அவ் வப்போது போதுமான அளவில் எடுத்து மாநில அரசு அதிகாரிகள் அவற்றை தர சோதனைக்கு உட் படுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. இதில் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது மத்திய அரசின் சட்டப்படி கடுமை யான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.