“மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?”

“மீண்டும் இளையராஜாகூட இணைஞ்சிருக்கீங்க, என்ன ஸ்பெஷல்?”

“இந்தப் படத்துல அவருடைய இசையைக் கேட்டு, இவ்வளவு நாளா இளையராஜாவைப் புரிஞ்சுக்காமலேயே அவருடைய இசையைக் கேட்டுட்டோமோன்னு சந்தேகமே வந்திடுச்சு. அவரை வியந்து எவ்வளவோ விஷயங்களைப் பேசியிருக்கேன். அதெல்லாம் ரொம்பக் கம்மி. ‘சைக்கோ’வைப் பார்த்துட்டு, ‘கொலைகாரப் பாவி’ன்னு சொன்னார். ‘நல்லாயில்லையா’ன்னு கேட்டேன், ‘இப்படி எடுத்து வெச்சிருக்க… அழகா இருக்குடா!’ன்னு பாராட்டினார். 12 வயசுப் பையனின் சுறுசுறுப்போடு இந்தப் படத்துக்கு இசையமைச்சுக் கொடுத்தார். என் கதாபாத்திரங்களை நான் புரிஞ்சுக்கிட்டதுக்கும் அதிகமா அவர் புரிஞ்சிருந்தார். இந்தப் படத்துல அவரோட இசையைக் கேட்டு, இனி என் படங்கள்ல இளையராஜா இல்லாம பண்ணவே முடியாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். ‘துப்பறிவாளன் 2’ படத்துக்கும் இளையராஜாதான் இசைன்னு விஷால்கிட்ட சொல்லிட்டேன். இந்தியாவின் ஒரே ஜீனியஸ் ராஜாதான்!”
Psycho – Mysskin Thupparivaalan 2🌐