கஹகஷான் பர்வீன்
மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அவை நடவடிக்கைகளை முதல்முறை பெண் எம்.பி. ஒருவர் வழிநடத்திய சாதனை நேற்று முன்தினம் நிகழ்த்தப்பட்டது.
மாநிலங்களவையில் அவைத் தலைவர் இல்லாதபோது அவை நடவடிக்கைகளை துணைத் தலைவர் வழிநடத்துவார். அவை யின் மூத்த உறுப்பினர்கள் துணைத் தலைவராக செயல்படுவது வழக்கம்.
இதை ஏற்றுக்கொண்ட வெங்கய்ய நாயுடு, பிஹாரை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் பெண் எம்.பி. கஹகஷான் பர்வீனை மாநிலங்களவை துணைத் தலைவர்களில் ஒரு வராக கடந்த 27-ம் தேதி நியமித்தார். முதல்முறை எம்.பி.யான இவர் கடந்த 2014-ல் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து கேள்வி நேரம் தொடங்கியபோது, அவைத் தலைவருக்கான இருக்கையில் பர்வீன் வந்து அமர்ந்தபோது, அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பர்வீன் தனது பணியை மிகவும் நம்பிக்கையுடன் செய்ததாக வெங்கய்ய நாயுடு பின்னர் பாராட் டினார். 10 ஆண்டுகளில் மாநிலங் களவையில் கேள்வி நேரத்தின் போது முதல்முறை பெண் ஒருவர் அவைக்கு தலைமை வகித்தது இதுவே முதல்முறை என அதிகாரிகள் தெரிவித்தனர்.