முதல்வர் எடப்பாடி துறைகள் யாருக்கு என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பளீச் பதில்!

முதல்வர் பொறுப்பு யாருக்கும் கிடையாது… அது அவரிடம்தான் இருக்கும்… எடப்பாடி துறைகள் யாருக்கு என்ற கேள்விக்கு ஜெயக்குமார் பளீச் பதில்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 12 நாட்களுக்கு அரசு முறை பயணமாக லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். நாளை காலை 9.45 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் எடப்பாடி பழனிச்சாமி லண்டனுக்குப் புறப்படுகிறார். அவர் வகித்துவரும் துறைகள் யாரிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் துறைகளை ஒப்படைக்கமாட்டார் என்றும் தனக்கு நெருக்கமான கொங்கு அமைச்சர்களிடம் ஒப்படைப்பார் என்றும் தகவல் வெளியானது.
@ மறுபடி பன்னீர் மௌனவிரதம்தான்!🌐