முன்னாள் மத்திய மந்திரி மீது பாலியல் புகார் கொடுத்த சட்ட மாணவி ‘திடீர்’ கைது

முன்னாள் மத்திய மந்திரி மீது பாலியல் புகார் கொடுத்த சட்ட மாணவி ‘திடீர்’ கைது – ரூ.5 கோடி கேட்டு மிரட்டியதாக வழக்கு
@ உத்தரபிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுவாமி சின்மயானந்த் மீது அவரது சட்டக்கல்லூரியில் படித்து வரும் 23 வயது மாணவி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். சின்மயானந்த், தன்னை கற்பழித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதன்பேரில் சின்மயானந்த் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு, கடந்த வாரம் சின்மயானந்தை கைது செய்தது. அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை அவரது ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதே நாளில், அவர் நெஞ்சுவலிக்காக லக்னோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே, பாலியல் புகார் அளிக்காமல் இருப்பதற்கு ரூ.5 கோடி தரவேண்டும் என்று கேட்டு சட்டக்கல்லூரி மாணவியும், அவரது உறவினர்களும் மிரட்டியதாக சின்மயானந்த் தரப்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. 👇🏾🌐
அதன் அடிப்படையில், மாணவி உள்பட 4 பேர் மீது போலீசார் பணம் பறிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.
# திடீர் திருப்பமாக, சட்டக்கல்லூரி மாணவி நேற்று கைது செய்யப்பட்டார். வீட்டுக்கு செல்லும் சாலைகளின் இருமுனைகளும் மூடப்பட்டன. அதன்பிறகு அதிகாரிகள் உள்ளே நுழைந்து மாணவியை கைது செய்தனர். மாணவியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.