மூடநம்பிக்கையால்தான் 11 பேர் தற்கொலை: டெல்லி போலீஸ் தகவல்

டெல்லியில் ஒரே குடும்பத்தில் 11 பேர் தற்கொலை செய்து கொண்டதற்கு மூடநம்பிக்கையே கார ணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி புராரி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு வீட்டில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 77 வயதான நாராயண் தேவி மற்றும் அவரது பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் அனைவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனையில் உறுதியானது.

தனது குடும்பத்தினருடன் நாராயண் தேவி (நடுவில்)

தற்கொலைக்கு அவர்களின் மூட நம்பிக்கையே காரணம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நாராயண் தேவி யின் இளைய மகன் லலித் சுண்டவா எழுதிய குறிப்புகளில் இருந்து இது தெரியவந்துள்ளது. உலகம் அழியப் போவதாகவும், நான் உங்களை வந்து காப்பாற்றுவேன் என்று 10 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது தந்தையிடம் இருந்து செய்தி வந்துள்ளதாக குடும்பத்தாரிடம் கூறிய லலித் சுண்டவா எல்லாரையும் தற்கொலைக்கு தூண்டியுள்ளார். மூட நம்பிக்கை அதிகம் கொண்ட அவரது குடும்பத்தாரும் அவர் கூறுவதை நம்பியுள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே, லலித் சுண்டவாவின் சகோதரி சுஜாதா, ‘‘எனது குடும்பத்தாரை யாரோ கொலை செய்துள்ளனர். போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.