மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாகும் வேலை வாய்ப்பு விவரங்களை பராமரிக்கவில்லை: வர்த்தகத்துறை இணை அமைச்சர் தகவல்

`மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாகும் வேலை வாய்ப்பு புள்ளிவிவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை என வர்த்தகத் துறை இணையமைச்சர் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

`மேக் இன் இந்தியா’ திட்டம் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியா வில் இதுவரை எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள் ளன? எவ்வளவு பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்று உறுப்பினர்கள் கேட்ட கேள் விக்கு அமைச்சர் இதனை குறிப்பிட் டுள்ளார். இது குறித்து மக்களவை யில் எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில் அவர் கூறியுள்ளதாவது,

இந்தியாவில் உற்பத்தி போட்டியை ஊக்குவிக்க 2014-ம் ஆண்டிலிருந்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தரமான உள் கட்டமைப்பு வசதிகள், போக்கு வரத்து கட்டணங்கள் குறைப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் நுட்ப வசதிகள் உள்பட பல நட வடிக்கைகளை அளித்துள்ளது. தற்போது 27 துறைகளில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாடு துறை 15 உற்பத்தி துறைகளையும், வர்த்தகத் துறை 12 சேவைத்துறைகளை யும் ஒருங்கிணைக்கின்றன.

புதிதாக மாற்றியமைக்கப்பட்ட இந்த 27 துறைகளில் ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள், உயிரி தொழில்நுட்பம், சட்டச் சேவை உள்ளிட்டவை உள்ளன என்று கூறியுள்ளார்.

2017-18-ம் ஆண்டில் தங்கம் இறக் குமதி 22.43 சதவீதம் அதிகரித்து 955.16 டன்னாக உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் சவுத்ரி அளித்த எழுத்துபூர்வமாக பதிலில்,

2016-17-ம் ஆண்டில் இந்தியா வின் தங்கம் இறக்குமதி 780.14 டன்னாக இருந்தது. ஆனால் 2017-18-ம் ஆண்டில் தங்கத் தின் இறக்குமதி அளவு அதி கரித்துள்ளது. குறிப்பாக 2017-18-ம் ஆண்டில் முதல் மற்றும் இரண் டாவது காலாண்டில் அதிகரித்த இறக்குமதி, மூன்றாவது, நான்கா வது காலாண்டுகளில் குறைந்தது. ஒட்டுமொத்தமாக 2016-17-ம் ஆண்டைவிட 2017-18ம் ஆண்டில் 22.43 சதவீதம் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதில ளித்த அமைச்சர், இந்தியா இறக்கு மதியை நம்பியிருப்பதை குறைக் கும் வகையில் சில பொருட் களின் இறக்குமதியை குறைப் பதற்கு அடையாளம் காணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பொருள் உற் பத்தியை ஊக்குவிக்கும் வகை யில் இந்த நடவடிக்கை மேற்கொள் ளப்படுகிறது என்றார். இந்தியா வில் இறக்குமதி 2017-18ம் ஆண்டில் 465.5 பில்லியன் டால ராக அதிகரித்துள்ளது. அதற்கு முந் தைய ஆண்டில் 384.3 பில்லியன் டாலராக இருந்தது என்றார்.

Leave a comment

Your email address will not be published.