யமஹா ஆர்15 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்கள்

யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 மோட்டோ ஜிபி எடிஷன் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி புதிய மோட்டோ ஜிபி எடிஷன் ஆகஸ்டு மாத வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 மாடலில் நீல நிற பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இதே நிறம் அந்நிறுவனத்தின் மோட்டோ ஜிபி மோட்டார்சைக்கிளுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மோட்டார்சைக்கிளில் மூவிஸ்டார் லோகோ முன்பக்கமும், பக்கவாட்டுகளிலும் இடம்பெற்றிருக்கிறது.
மேலும் ENEOS லோகோ வழங்கப்பட்டு, வேலென்டினோ ரோசி மற்றும் மேவரிக் வினேல்ஸ் ரேசிங் நம்பர்கள் மட்டும் வழங்கப்படவில்லை. சில தென்கிழக்கு ஆசிய நாடுகளில் யமஹா YZF-R15 வெர்ஷன் 3.0 மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகிறது.
புதிய மோட்டோ ஜிபி எடிஷனில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. யமஹா R15 வெர்ஷன் 3.0 மாடலில் 155சிசி, 4-ஸ்டிரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் 19 பிஹெச்பி பவர் மற்றும் 15 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது.
இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் சர்வதேச மாடலில் யுஎஸ்டி முன்பக்க ஃபோர்க்-கள் வழங்கப்படுகிறது, எனினும் இந்திய மாடலில் வழக்கமான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் யமஹா R15 வெர்ஷன் 3.0 மாடல்: தன்டர் கிரே மற்றும் ரேசிங் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. புதிய மோட்டோ ஜிபி எடிஷன் கூடுதலாக இரண்டு புதிய பெயின்ட் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.