யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும் இந்த புதிய ஸ்கூட்டர் மாடல் குறித்த விபரங்களை இப்போது பார்க்கலாம்.
யமஹா ரே ஸ்கூட்டரின் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இளைஞர்களை கவரும் பல்வேறு கவர்ச்சிகரமான விஷயங்கள் இந்த விசேஷ மாடலில் இடம்பெற்றிருந்தது.
புதிய யமஹா ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி ஸ்கூட்டர் இரண்டு இரட்டை வண்ணக் கலவையில் காட்சியளித்தது. இந்த ஸ்கூட்டரில் விசேஷ பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள், 6 ஸ்போக்ஸ் தங்க வண்ண அலாய் வீல்கள் இதன் மற்றொரு முக்கிய அம்சமாக இருந்தது. சஸ்பென்ஷனின் ஸ்பிரிங்குகளிலும் தங்க வண்ண முலாம் பூச்சுடன் காட்சி தந்தது.
இந்த ஸ்கூட்டரில் அலுமினிய ஃபுட்ரெஸ்ட்டுகள், கருப்பு வண்ண எஞ்சின் கார்டு, கைப்பிடிகளில் தங்க வண்ண அலங்காரம் உள்ளிட்டவை கண்ணை கவரும் அம்சங்களாக இருந்தன. அதாவது, கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராலி ரேஸ் ஸ்கூட்டர் போன்று காட்சி தருகிறது. ஆனால், இப்போது வந்திருக்கும் மாடலில் பல்வேறு அம்சங்கள் நீக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிரது.
தற்போது வந்திருக்கும் மாடலில் புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள் கொடுக்கப்பட்டு இருக்கினறன. ராலி ரெட் மற்றும் ரேஸிங் புளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்கூட்டருக்கு ரூ.57,898 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
“யமஹா சிக்னஸ் ரே இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி எடிசன் மாடலானது ஸ்டைல் மற்றும் செயல்திறன் என இரண்டையும் கலந்து கட்டிய கலவையாக இருக்கும்,” என யமஹா நிறுவனத்தின் உயர் அதிகாரி ராய் குரியன் கூறி இருக்கிறார்