யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

ராஞ்சியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று இரவே ராஞ்சிக்கு சென்று கவர்னர் மாளிகையில் தங்கினார். இன்று காலை 6 மணிக்கு அவர் யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யோகாசனம் செய்கிறார்.🌐