சார்ஜிங் கேபிளில் சிறிய உருளை : ரகசியம் இது தான்.!
இன்று மனிதர்களைப் பம்பரம் போல் இயங்க அத்தியாவசிய தேவையாக மின்சாரம் இருக்கின்றது. நம் உடலின் இரத்தம், சதை போன்று நம்முடன் எப்பவும் இருப்பது மின்சாரம் மூலம் இயங்கும் கருவிகள் தான்.
மேல் இருக்கும் புகைப்படத்தில் காணப்படுவதைப் போன்று லாப்டாப் அல்லது மொபைல் சார்ஜிங் வையர்களில் சிறிய அளவு உருளை (சிலிண்டர்) இருப்பதை இதற்கு முன் கவனித்துள்ளீர்களா?
தேவையில்லாமல் இங்கு ஏன் இது போன்ற உருளை இருக்கின்றது?
பொதுவாக லாப்டாப், மொபைல் மற்றும் கீபோர்டு வையர்களிலும் இது போன்ற சிறிய உருளை பொருத்தப்பட்டிருக்கும். இவை ஃபெரைட் பீட்ஸ் என அழைக்கப்படுகின்றன.
இந்த ஃபெரைட் பீட்ஸ் மின்சார இழப்பைத் தடுக்கவே பொருத்தப்பட்டுள்ளன. இவை இஎம்ஐ (EMI) ஃபில்டர் மற்றும் சோக் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த உருளைகள் சார்ஜிங்-ஐ சிறப்பானதாக மாற்றி மின் பரிமாற்ற ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
மின்சாரம் கேபிள் மூலம் பாயும் போது அதிகளவு மின்சார இழப்பு நேரிடலாம், இதனைத் தடுத்து நிறுத்துவதால் ஃபெரைட் பீட்ஸ் கேபிளின் இறுதியில் பொருத்தப்படுகின்றன.