ரசிகர் மன்றங்களுக்கு ஆப்பு வைத்த “பிகில்” தயாரிப்பு நிறுவனம்..! – தமிழ் சினிமாவில் முதல் முறை..!👇🏾🌐

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு இறுதி நாளில் துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் 400 பேருக்கு தங்க மோதிரங்களை அவர் பரிசாகவும் வழங்கினார்.

இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.தீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களை தள்ளி வைத்துள்ளதால் பிகில் மட்டுமே தீபாவளிக்கு தனித்து திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும்.

எனவே 24-ந் தேதி வியாழக்கிழமையன்று படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்தவுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

வழக்கமாக, ஆடியோ வெளியீட்டு நிகழ்சிக்காக டிக்கெட்டுகள் ரசிகர் மன்றங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மொத்தமாக வாங்கி அதனை சக ரசிகர்களுக்கு 500 ரூபாய் 1000 ரூபாய் என்று விற்று பணம் பார்த்து வந்தனர்.

இதற்கு ஆப்பு வைக்கும் வகையில், இப்போது தயாரிப்பு நிறுவனமே டிக்கெட்டுகளை விற்க முன்வதுள்ளது. மேலும், டிக்கெட் புக்கிங்கை ஆன்லைனில் புக் செய்துகொள்ளும் வசதியையும் ஏற்பாடு செய்யவுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் நேரடியாக டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்துகொள்ளலாம்.

தமிழ் சினிமாவில் முதன் முறையாக இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.