ராஜஸ்தானில் முதன்முறையாக, நவம்பரில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலின் போது EVM-ல் ‘நிறைவு பொத்தான்’

ராஜஸ்தானில் முதன்முறையாக, நவம்பரில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலின் போது EVM-ல் ‘நிறைவு பொத்தான்’ அறிமுகப்படுத்தப்படும்.🌐 இந்த பொத்தானின் மூலம் ஒரு நபர் ஒரு இயந்திரத்தில் இரண்டு வெவ்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். மேலும், முதன்முறையாக, ஈ.வி.எம். இயந்திரங்கள் முழுவதையும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி வைப்பதற்கு பதிலாக அதிலுள்ள நினைவை அட்டையை மட்டுமே சட்ட வழக்குகளில் பயன்படுத்தப்படுமாம்.

“முன்னதாக, ஈ.வி.எம் இயந்திரம் சட்ட சிக்கலில் சிக்கினால் அது ஒதுக்கி வைக்கப்பட்டது. இப்போது, இயந்திரத்தில் உள்ள நினைவை அட்டையை பிரித்து சட்ட வழக்குகளுக்காக பாதுகாக்கப்படும். எவ்வாறாயினும், இயந்திரங்களை வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும் ” என்று மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தாராம்.

இத்தனை மாற்றங்களை செய்வது போல் பன்ம உடனடி வாக்கெடுப்பு முறையும் செயல்படுத்தலாம் ஆனால் முற்றிலும் உணர்ந்தே ஏமாற்றுபவர்களுடன் சேர்ந்து ஏமார்ந்தது போக ஏதாவது சொற்ப ஏற்றம் கிடைக்காத என ஏங்கி ஏமாறும் மக்களுக்கு ஏன் அதிகார பகிர்வு செய்ய வேண்டும்⁉