ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

புதுடெல்லி:
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை இரண்டாம் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பாரா-ட்ரூப்பர்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் என அழைக்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள்கள் RE/WD 125 மோட்டார்சைக்கிளை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. RE/WD 125 மாடல் 2-ஸ்டிரோக் மோட்டார்சைக்கிள் என்ற வகையில் அதிக பிரபலமான மாடலாக இருந்தது.
2-ஸ்டிரோக் மோட்டார்சைக்கிள் என்பதால் எடை குறைவாகவும், அவசர தகவல்களை பரப்புவோர் மத்தியில் மிகவும் பிரபலமாகவும் இருந்தது. இந்த மோட்டார்சைக்கிளை கடினமான சூழல்களில் ஓட்டமுடியாமல் போனால் மோட்டார்சைக்கிளை தோளின் மீது தூக்கிக் கொண்டு நடக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
கிளாசிக் 500 பெகாசஸ் லிமிட்டெட் எடிஷன் மொத்தமாகவே 1000 யூனி்ட்களே மட்டுமே தயாரிக்கப்படுவதாக ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவில் வெறும் 250 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை GBP 4,999 (இந்திய மதிப்பில் ரூ.4.5 லட்சம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் விலை ரூ.2 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லிமிட்டெட் எடிஷன் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிளின் ஃபியூயல் டேன்க்-இல் பெகாசஸ் லோகோ, ராணுவ தோற்றம் கொண்ட பை, பித்தளை பக்கிள்கள் கொண்ட லெதர் ஸ்டிராப், RE/WD 125 தோற்றம் கொண்ட டேன்க் பேட்ஜ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹேன்டிள்பார், ஹெட்லைட் பெசல், எக்சாஸ்ட் மஃப்ளர் இன்ஜின் மற்றும் ரிம்கள் முழுமையாக பிளாக்-டு அவுட் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் ஆலிவ் டிராப் கிரீன் மற்றும் சர்வீஸ் பிரவுன் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் பரவுன் நிற மாடல் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒவ்வொரு லிமிட்டெட் எடிஷன் மோட்டார்சைக்கிளிலும் பிரத்யேக குறியீட்டு எண் மாடலின் ஃபியூயல் டேன்க்-இல் அச்சடிக்கப்படும்.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பெகாசஸ் மாடலில் 499 சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27.2 பிஹெச்பி பவர், 41.3 என்எம் டார்கியூ செயல்திறன் கொண்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.