ரியல் எஸ்டேட்டில் ‘ஏன்’ முதலீடு செய்ய வேண்டும்..? நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய 10 உண்மைகள்..!

30 வருடங்களுக்கு முன்பு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது ஒரு ஆடம்பரமாகக் கருதப்பட்டது. நடுத்தர வர்க்கத்தினர் ஆடம்பரமாகக் கருதப்பட்ட இந்த ரியல் எஸ்டேட் தற்போது லாபகரமான தொழிலில் முன்னணியில் இருப்பதால் தற்போது நடுத்தர வர்க்கத்தினர் முதல் பணக்கார்கள் வரை பயமின்றி ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து வருகின்றனர். பங்குச்சந்தை, மீயூச்சுவல் பண்ட் போல் போட்ட முதலுக்கு நஷ்டமின்றி இருப்பதோடு பல மடங்கு லாபம் கியாரண்டி என்பது ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே உள்ளது. இது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒருசில உண்மைகளை இங்குப் பார்ப்போம்

பாதுகாப்பான தேர்வு வீட்டை விடப் பாதுகாப்பான இடம் ஒரு மனிதனுக்கு இல்லை. அதேபோல் அந்த வீட்டில் செய்யப்படும் முதலீடும் பாதுகாப்பானது. பங்குச்சந்தை மற்றும் கமாடிட்டி தொழிலில் நாம் போடும் முதலீடு மிகக்குறைந்த நாட்களில் பலமடங்கு உயரும் வாய்ப்பு இருக்கின்றது. அதே நேரத்தில் நாம் செய்யும் முதலீடு ஜீரோ ஆகும் அபாயமும் அதில் உள்ளது. ஆனால் ரியல் எஸ்டேட்டை பொருத்தவரை நாம் வாங்கிப் போட்ட மனையோ வீடோ கண்டிப்பாக ஒருசில வருடங்களில் உயருமே தவிர குறைந்ததாகச் சரித்திரம் இல்லை.

ஏகப்பட்ட பைனான்ஸ் வசதிகள் மற்ற பொருட்கள் வாங்கவோ அல்லது தொழில் தொடங்கவோ வங்கிகளில் அவ்வளவு எளிதில் பைனான்ஸ் கிடைக்காது. ஆனால் வீடு, நிலம் வாங்க அனைத்து வங்கிகளும், வங்கிகள் அல்லாத பைனான்சியல் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு லோன் கொடுத்து வருகின்றன. ரியல் எஸ்டேட்டுக்காக கொடுக்கப்படும் கடன்கள் பெரும்பாலும் வசூலாகிவிடுவதுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஒவ்வொருவரின் நிச்சய தேவை உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாத தேவை. எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் வீட்டை வாங்குவது தான் சால சிறந்தது. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு வீடுகளையோ அல்லது மனைகளையோ வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதில் உள்ளது. மேலும் இதன் மூலம் வருமானம் வரும் வழியும் உண்டு. வீட்டை லோன் போட்டு வாங்கி அதன் பின்னர் அதை வாடகைக்கு விட்டால் கிட்டத்தட்ட அந்த வாடகையை வைத்தே லோன் கட்டிவிடலாம். ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பின் நமக்கு அந்த வீடு வருமானத்தைக் கொடுக்கும்., மேலும் குறைந்த விலையில் பழைய வீட்டை வாங்கி ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவு செய்து மராமத்து செய்தால் அந்த வீடு புதுவீடு போல ஆகிவிடுவதுடன் அதன் மதிப்பும் உயர்ந்துவிடும்.

Leave a comment

Your email address will not be published.