ரீஃபண்ட் தொகை பெறுவது குறித்த எஸ்எம்எஸ்-களை நம்பி ஏமாற வேண்டாம்: வருமானவரி அதிகாரிகள் எச்சரிக்கை

    வருமானவரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு ரீஃபண்ட் தொகை பெறுவது குறித்து குறுந்தகவல் (எஸ்எம்எஸ்) அனுப்பி அவர்களை ஏமாற்றும் மோசடி ஒன்று புதிதாக தோன்றியுள்ளது.

இதுகுறித்து வருமானவரித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமானவரி செலுத்து பவர்கள் தாங்கள் செலுத்தும் வரியில் கழிவு போக எஞ்சிய தொகையை ரீஃபண்ட்டாக பெறுகின்றனர்.

இந்நிலையில், மோசடி கும்பல் ஒன்று வருமானவரி தாக்கல் செய்யும் நபர்களின் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்புகிறது. அதில், ‘தாங்கள் செலுத்திய வருமான வரிக்கான ரீஃபண்ட் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது. எனவே, நாங்கள் குறிப்பிட்டுள்ள இணையதள லிங்க்கில் சென்று உங்கள் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நம்பி வங்கிக் கணக்கு விவரங்களை அப்டேட் செய்தால், அந்த விவரங்களை திருடி, அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை இந்த கும்பல் திருடுகிறது. இதற்காக, போலி இணையதள பக்கத்தையும் உருவாக்கியுள்ளனர்.

வரி செலுத்துபவர்கள் இத்தகைய குறுந்தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம். இதுபோன்ற குறுந்தகவல்கள் வந்தால், அதன் நம்பகத்தன்மை குறித்து அருகில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Leave a comment

Your email address will not be published.