லாபம் அளிக்க கூடிய பங்குகளை அடையாளம் காண்பது எப்படி?

பல முதலீட்டாளர்களுக்கு எந்தப் பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்க வேண்டும்? வைத்திருக்கக் கூடாது? என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். இது பங்கு சந்தையில் வர்த்தகர்கள் தினசரி சந்திக்கும் சவால்களாகும். நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதற்கு முன்னர்க் குறிப்பிட்ட சாரம்சங்களோடு நீண்ட கால இலக்குகள் மற்றும் முழு அளவிலான சுழற்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் சிறந்த ஆதாயத்துடன் வெற்றி பெற்ற பங்குகள் நீண்ட கால முதலீடு மூலமானது தான் என்பது பல தருணங்களில் நிரூபணமாகியுள்ளது. திட்டமிட்ட முதலீட்டுத் திட்டம் என்று அழைக்கப்படும் எஸ்ஐபி கடந்த 40 ஆண்டுகளில் 10 முறை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் உள்ள பங்குகள் எல்லாம் சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதாகும்.

எனினும் எந்தப் பங்குகளை நீண்ட நாட்களுக்கு வைத்திருப்பது என்பதைப் புரிந்துகொள்வது கட்டாயமாகும். லாபம் அளிக்கும் பங்குகளை அடையாளம் காண இங்கே சில வழிமுறைகள் உள்ளது.

அடிப்படை பகுப்பாய்வு ஒரு நிறுவனத்தில் ஆரோக்கிய நிலையைத் தொழில்நுட்ப வல்லுனர்கள் நமக்குக் கணித்துக் கூறுவார்கள். எதிர்கால ஆரோக்கியத்தைக் கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவு கொண்டது தான்.

 வருவாயை தக்கவைத்தல்

 

வருவாயை தக்கவைத்தல் நிறுவனங்கள் ஈவுத்தொகை வழங்கக் கூடிய திறன் குறித்து இது தெரியப்படுத்தும். வரலாற்றுப் புள்ளவிபரங்கள் மூலம் நிறுவனத்தின் செயல்பாட்டைக் கணிக்க உதவியாக இருக்கும். நிறுவனம் போதுமான அளவில் நிலையாக இருந்தால் வருவாயை தக்கவைத்துக் கொள்ள முடியும். அதனால் இந்த நிறுவன பங்குகள் நீண்ட கால முதலீட்டிற்கு ஏற்றதாகும்.

நடப்பு விகிதம் மூலதன விகிதம் என்பது நடப்புச் சொத்துக்களை நடந்து பொறுப்புகளுடன் வகுப்பதாகும். இது நிறுவனத்தின் நிதி நிலையை எதிரொலிக்கக் கூடியதாகும். உயர் நடப்பு வகிதம் நிறுவனத்தின் நல்ல நிலையைக் குறிக்கும். அதனால் இத்தகைய நிறுவன பங்குகளைக் குறிப்பிட்ட காலத்திற்கு இருப்பு வைக்கலாம்.

பரவலான பொருளாதாரக் காரணிகள் இவை பங்கு விலையைத் தாக்க கூடியதாகும். பங்குகளை நீண்ட நாட்கள் வைத்திருப்பதற்கு இதின் கவனம் செலுத்த வேண்டும். சந்தை இயக்கத்தை முடிவு செய்யப் பரவலான பொருளாதாரக் காரணிகள் (மேக்ரோஎக்கனாமிக் ஃபேக்டர்ஸ்) உதவும்.

Leave a comment

Your email address will not be published.