வங்காளதேசத்தில் சாலையோர மரம் மீது பேருந்து மோதல்; 16 பேர் பலி

 

டாக்கா,

வங்காளதேசத்தின் டாக்கா நகரில் பலாஷ்பரி மாவட்டத்தில் ரங்பூர்-டாக்கா நெடுஞ்சாலையில் பஷ்காடா பகுதி அருகே பேருந்து ஒன்று இன்று அதிகாலை சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர்.  40 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனை தொடர்ந்து ஒன்றரை மணிநேரம் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதன்பின் நிலைமை சீரானபின் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.  பலியானவர்கள் யாரென்று அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகின்றன.

இதேபோன்று நேற்றிரவு ரங்பூர் பகுதியில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.  நட்டோர் பகுதியில் லாரி ஒன்று ஆட்டோ ரிக்சா மீது மோதியதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சாலை விபத்து சம்பவங்களில் 50 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.

1 comment

Leave a comment

Your email address will not be published.