வங்காள தேச முஸ்லீம்கள் என்று முத்திரை குத்தி துரத்த தயாராகும் பாசி பாஜகவின் காவிகள்.???

👆🏽🌍அஸ்ஸாமில் நாடு சுதந்திரம் அடைய பாடுபட்டவர்களின் குடும்பத்தாரையே வங்காள தேச முஸ்லீம்கள் என்று முத்திரை குத்தி துரத்த தயாராகும் பாசி பாஜகவின் காவிகள்.???

இந்த முதியவரைப் பாருங்கள். இவருக்கு வயது 70. பெயர் ஷம்சுல் இஸ்லாம். இவருடைய பெரியப்பா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திர இந்தியாவின் வரைபடத்தில் அஸ்ஸாம் இடம் பெற்றிருப்பதற்குப் பின்புலமாக இருந்து இன்றியமையாத பங்காற்றிய மௌலவி அமீருத்தீன் என்கிற முஸ்லிம் அரசியல் தலைவரின் தம்பி மகன்தான் இவர்.

இந்தியாவுடன் சேர்வதா, கிழக்கு பாகிஸ்தானுடன் இணைவதா என்பதைத் தீர்மானிக்கின்ற நோக்கத்துடன் 1946-இல் அஸ்ஸாம் சட்டசபை கூடியது. அப்போது அஸ்ஸாம் சட்டசபையில் முஸ்லிம்கள்தாம் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். அஸ்ஸாம் முஸ்லிம் லீக் தலைவரும் பிரிட்டிஷ் இந்தியாவில் அஸ்ஸாம் மாநிலத்தின் பிரதமராக இருந்தவருமான முஹம்மத் சாதுல்லாஹ் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைவது எனத் தீர்மானமாக இருந்தார். முழுமையான இணைப்பு சாத்தியமில்லையெனில் குறைந்தபட்சம் அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கின்ற பகுதிகளையாவது கிழக்கு பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

சாதுல்லாஹ்வின் திட்டத்தை முறியடிப்பதில் மிகப் பெரும் பங்காற்றியவர் அப்போது துணை சபாநாயகராக இருந்த மௌலவி அமீருத்தீன்தான். தேசப் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்து வந்த ஜமிய்யத்தே உலமா யே ஹிந்த் அமைப்பின் உறுப்பினராக இருந்த மௌலவி அமீருத்தீன் முஸ்லிம் லீக்கையும் முஹம்மத் அலீ ஜின்னாவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வந்தார்.

அமீருத்தீனும் காங்கிரஸ் தலைவரும் அஸ்ஸாம் முதல்வருமான கோபிநாத் போர்தோலாயும் அஸ்ஸாம் மாநில சட்டசபை உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியாகச் சந்தித்து முனைப்புடன் செயலாற்றி இந்தியாவுடன் இணைகின்ற தீர்மானம் வெற்றி பெறச் செய்தனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்குப் பிறகு அஸ்ஸாம் இந்தியாவின் மாநிலமாக மலர்ந்தது.

எழுபத்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் அதே அமீருத்தீனின் உறவினர்கள் இன்று பங்களாதேசிகள் என முத்திரை குத்தப்பட்டு இந்தியக் குடியுரிமையையே இழக்கின்ற துயரத்துக்கு ஆளாகி நிற்கின்றார்கள்.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட என்ஆர்சியின் பட்டியலில் இடம் பெறாமல் போன நாற்பது இலட்சம் முஸ்லிம்களில் அமீருத்தீனின் உறவினர்களும் அடங்குவர். அமீருத்தீன் அவர்களின் சகோதரரின் பேரன்கள் ரஃபீகுல் இஸ்லாம், முயிசுல் இஸ்லாம் ஆகிய இருவரும் வங்கதேசிகளாய் முத்திரை குத்தப்பட்டு விட்டார்கள்.

அமீருத்தீனின் சகோதரர் முஸஃப்பர் ஹுசைனின் மகனார் ஷம்சுல் இஸ்லாமின் பெயர் கிளியர் ஆகிவிட்டது. ஆனால் பிள்ளைகளின் குடியுரிமை பறிக்கப்படுகின்ற ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் தூக்கத்தைப் பறிகொடுத்து நிற்கின்றார், ஷம்சுல் இஸ்லாம்.

இது அஸ்ஸாமோடு முடிந்து விடக்கூடிய அவலமாகத் தோன்றவில்லை. இப்போதே வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற இன்றியமையாத ஆவணங்களை ஒழுங்காக பதிவு செய்து வைத்துக் கொள்வது அவசியம். இதற்காக வேண்டி விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயம்.🛑