வசூலில் சாதனை படைத்த சாஹோ

வசூலில் சாதனை படைத்த சாஹோ

பிரபாஸ் நடிப்பில் ஆகஸ்ட் 30ம் தேதி வெளியான படம் சாஹோ. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியானது. ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 400 கோடி ரூபாய் வசூலை எட்டி சாதனை படைத்திருக்கிறது.

சுஜீத் இயக்கத்தில் பாகுபலி பிரபாஸ், பாலிவுட் ஸ்ரத்தா கபூர் நடிப்பில், யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகும் முன்பே படத்தின் அனைத்து மொழி வியாபாரங்களில் சாதனை படைத்தது. மேலும் டிஜிட்டல், சாட்டிலைட் உரிமங்களிலும் படத்தின் பட்ஜெட்டை மிஞ்சிய வியாபாரத்தை எட்டியது.

படத்தின் வெளியீட்டுக்கு பிறகு பிரபாசின் ரசிகர்களால் உலகளவில் இப்போது சாதனை படைத்து வருகிறது. 🌐