வடகொரியா – அமெரிக்கா இடையே உறவு கனிவாக மாறியிருந்தாலும் வடகொரியா புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையிடம் பேசிய சில அம்மெரிக்க அதிகாரிகள், வட கொரியாவில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம் தனது செயல்பாட்டினை தொடர்ந்து வருவது, உளவு செயற்கைகோள்கள் மூலம் கண்டறியப்பட்டதாக தெரிவித்தனர்.
ஆனால், அதனுள் நடைபெற்று வரும் வேலைகள் எதுவரை போயுள்ளன என்பது தெரியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்து கொண்டனர்.