பொய் செய்திகள் காரணமாக, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சுமார் 700 முகவரிகள் (யுஆர்எல்) முடக்கப்பட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநிலங்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
சமூக ஊடகங்களில் வதந்தி மற்றும் பொய் செய்திகள் பரவுவதை தடுக்க தொழில்நுட்பத் தீர்வுகளை உறுதி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பொய் செய்திகள் காரணமாக சுமார் 700 முகவரிகளை சமூக ஊடக நிறுவனங்கள் முடக்கியுள்ளன.
இந்த ஆண்டு ஜூன் வரை 499 முகவரிகளை பேஸ்புக் முடக்கியுள்ளது. இதுபோல் யூடியூப் (57), ட்விட்டர் (88), இன்ஸ்டாகிராம் (25), டம்ப்ளர் (28) சார்பிலும் இணைய முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன என்றார்.